சமையலறையில் கண்ணாடி பாத்திரத்தைப் பயன்படுத்தி சேமியா பாயசம் செய்ய முயன்ற பெண் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான விபத்து குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Fulla🩰|فلة (@fu___lla03)

அந்தப் பெண் அடுப்பில் கண்ணாடி பாத்திரத்தை வைத்து வெண்ணெய் மற்றும் சேமியாவை வறுத்துக் கொண்டிருந்தபோது எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. ஆனால் வறுத்த சேமியாவில் அவர் பாலை ஊற்றிய அடுத்த நொடியே அந்தப் பாத்திரம் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீப்பந்தமாக மாறியது.

வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் காயமின்றி உயிர் தப்பினார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியைக் கண்ட பலரும், சமையலுக்குக் கண்ணாடி பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.