தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைத் தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தீவிர முயற்சி எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாகக் களமிறங்கி, விஜய்க்கு ஒரு “மெகா டீலிங்கை” முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

அதில் தேர்தலுக்கான பெரும் நிதி உதவி, தேர்தலில் வெற்றி பெற்றால் துணை முதல்வர் (DCM) பதவி மற்றும் பல முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்ததாகப் பேசப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அவரை எப்படியாவது NDA கூட்டணியில் இணைக்க பாஜக இவ்வளவு பெரிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.

​இருப்பினும், தனது முதல் மாநாட்டிலேயே பாஜக-வை ‘கொள்கை எதிரி’ என்று அறிவித்த விஜய், இந்த மெகா டீலிங்கைத் துளியும் யோசிக்காமல் நிராகரித்துவிட்டாராம். அமித்ஷாவிடம் மிகவும் உறுதியாக “நோ” (NO) என்று சொல்லிவிட்டு, தனது கொள்கையில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

பதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்படாமல், தனது அரசியல் நிலைப்பாட்டில் விஜய் காட்டியுள்ள இந்தத் துணிச்சல் பாஜக மேலிடத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செய்தி த.வெ.க தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, விஜய்யின் அரசியல் ஆளுமையை அடுத்த கட்டத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளது.