பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போவதைக் கண்டு மக்கள் புலம்பி வரும் நிலையில், ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் தனது பங்க் வாசலில் வைத்துள்ள எச்சரிக்கை பலகை இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுவாக “உயிர் விலைமதிப்பற்றது, புகைபிடிக்காதீர்கள்” என்று தான் எல்லா இடங்களிலும் எழுதியிருப்பார்கள். ஆனால், இந்த பங்க் உரிமையாளரோ, “இங்கே புகைபிடிக்காதீர்கள், ஏனெனில் எங்கள் பெட்ரோல் மிகவும் விலை உயர்ந்தது. உங்களது உயிர் கூட இதற்கு முன்னால் மலிவானது தான்” (Your life is worthless, our petrol is very costly) என்று ஒரு அதிரடி போர்டை மாட்டியுள்ளார்.

​பெட்ரோல் விலை உயர்வை இதைவிடக் கடுமையாக யாராலும் நக்கலடிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்த வாசகம் அமைந்துள்ளது. இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, “உண்மைதான் சார், இப்போ இருக்குற நிலைமைக்கு பவுன் விலையும் பெட்ரோல் விலையும் தான் உசத்தி, மனுஷன் உயிர் எல்லாம் கடைசியில தான்” என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுகளைத் தட்டி வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகத் தனது ஆதங்கத்தை இப்படியொரு “சாவேஜ்” பாணியில் வெளிப்படுத்திய அந்த பங்க் உரிமையாளரின் துணிச்சலை ஒரு பக்கம் பாராட்டினாலும், இந்த வாசகம் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டதா அல்லது சீரியஸாக வைக்கப்பட்டதா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.