சமூக வலைதளங்களில் எப்போது என்ன வைரலாகும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில், @paswan_03_007 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ இப்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது. பீகாரைச் சேர்ந்த ஒரு நபர், தனது உள்ளங்கையில் புகையிலையைத் தேய்த்துத் தயார் செய்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு குரங்குக்கு, அவரே முன்வந்து அந்தப் புகையிலையை உண்ணத் தருகிறார். முதலில் தயங்கிய அந்தக் குரங்கு, பின்னர் ஆசையாகத் தனது கையால் புகையிலையை வாங்கி வாயில் போட்டுக் கொள்ளும் காட்சி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

​”பீகாரில் எதுவும் சாத்தியம்” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஏற்கனவே லட்சக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்ன புதுப் பழக்கம்?” என்று ஆச்சரியப்படுவதோடு மட்டுமல்லாமல், “என்னடா குரங்குக்கும் கெட்டப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கிறீங்க?” என்று கிண்டலாகவும், கோபமாகவும் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். “யாரும் தம்பாக்கு போடாதீங்கன்னு சொன்னா, இவரு குரங்குக்கே சொல்லிக் கொடுக்கிறாரே” என இந்தப் பதிவின் கீழ் ஒரு பெரிய விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது. வாயில்லா ஜீவன்களை இது போன்ற ஆபத்தான போதைப் பழக்கங்களுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது என்றாலும், இணையவாசிகள் இதை ஒரு வேடிக்கையான வீடியோவாகவே பார்த்து வருகின்றனர்.