தொழில்நுட்பத்தில் உலக நாடுகளை மிரள வைக்கும் சீனா, இப்போது ஷாங்காய் நகரில் ஒரு புதுமையான ஏடிஎம் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரணமாக ஏடிஎம் மெஷினில் கார்டைப் போட்டு பணத்தை எடுப்போம், ஆனால் இந்த மெஷினில் உங்கள் கையில் இருக்கும் தங்கம் அல்லது தங்க நகைகளைப் போட்டால் போதும். மெஷினுக்குள் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம், அந்தத் தங்கத்தை சுமார் 1200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உடனே உருக்கி, அதன் தரம் மற்றும் எடையைச் சில நொடிகளிலேயே கணக்கிடுகிறது.
தங்கத்தின் அன்றைய சந்தை மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அதற்கான பணத்தை நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கே உடனடியாக அனுப்பி விடுகிறது. அவசரத் தேவைக்கு நகையை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ அலைய வேண்டிய அவசியமில்லை என்பதற்காகவே இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
This ATM in Shanghai, China, melts your gold at 1200°C and transfers money straight to your account
— Science girl (@sciencegirl) February 10, 2026
பார்ப்பதற்குச் சயின்ஸ் பிக்சன் படம் போலத் தெரிந்தாலும், ஷாங்காய் மக்கள் மத்தியில் இந்த ‘கோல்ட் ஏடிஎம்’ இப்போதே செம்ம ஹிட் அடித்துள்ளது. இந்தியா போன்ற தங்கப் பிரியர்கள் அதிகம் உள்ள நாட்டிற்கு இந்த மெஷின் வந்தால் எப்படி இருக்கும் என்று இப்போதே சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
