உத்தரப்பிரதேச மாநிலம் தேவரியாவில் நடைபெற்ற ‘மஹுவாரி பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடர் இப்போது விளையாட்டைத் தாண்டி, வழங்கப்பட்ட வித்தியாசமான பரிசால் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. வழக்கமாகச் சிறந்த வீரருக்குக் கோப்பைகளோ அல்லது ரொக்கப் பரிசோ வழங்கப்படும், ஆனால் இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட வீரருக்குத் தாரை தப்பட்டை முழங்க ஒரு “உயிருள்ள நாட்டுக்கோழி” பரிசாக வழங்கப்பட்டது. அந்த வீரர் மேடையில் கோழியைத் தூக்கிக் கொண்டு நிற்கும் வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் “நிஜமான வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் இதுதான்” என்று கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.
In Deoria's local cricket premier league (UP), the Man of the Match award was a desi rooster. 🐓🏏
pic.twitter.com/p9izmRbQh5— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 10, 2026
இந்த வீடியோ ‘gharkekalesh’ போன்ற பிரபலமான மீம் பக்கங்களில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “நகரத்துல வாங்குற கோப்பை அலமாரியில தூசு தான் படியும், ஆனா தேவரியாவுல குடுத்த பரிசு அன்னைக்கு நைட்டே டின்னர் பிளான் ஆகிடும்” என்று மக்கள் கிண்டலாகப் பேசி வருகின்றனர். எது எப்படியோ, கிரிக்கெட் மட்டையை விட அந்த நாட்டுக்கோழி தான் இப்போ சோஷியல் மீடியால சிக்ஸர் அடிச்சு ‘வைரல்’ விக்கெட்டைத் தூக்கியிருக்கு
