வீட்டில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், திங்கட்கிழமை லீவ் கேட்ட இந்திய ஊழியர் ஒருவருக்கு, அவரது மேனேஜர் விடுத்த மிரட்டல் இப்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “இனிமேல் லீவ் கேட்டால் வேலையை விட்டு ஓடிவிட்டதாகக் கருதப்படும்” என்று மேனேஜர் மிரட்டலாக மெசேஜ் அனுப்ப, அதற்கு அந்த ஊழியர் துளியும் அஞ்சாமல், “சரி, பிப்ரவரி 7-ஆம் தேதியே எனது கடைசி வேலை நாளாக இருக்கட்டும்” என்று கூறி வாட்ஸ்அப்பிலேயே ராஜினாமா கடிதத்தை வீசியுள்ளார். “உண்மையைச் சொன்னது என் தப்புதான்” என்று அவர் சேர்த்த அந்த ஒரு வரி, அந்த மேனேஜரின் ஆணவத்தைச் சுக்குநூறாக உடைத்துவிட்டது.

You need me more than I need you
byu/Quirky_Carpenter915 inIndianWorkplace

​இந்தச் சம்பவம் ரெடிட் பக்கத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 1,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியது. ராஜினாமா மெசேஜைப் பார்த்தவுடன் பதறிப்போன மேனேஜர், உடனே அந்த ஊழியரை போனில் அழைத்து, “பிரச்சனையை இப்போது புரிந்து கொண்டேன், செவ்வாய்க்கிழமை வரை லீவ் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று பணிந்து வந்துள்ளார். “சுயமரியாதைதான் முக்கியம்” என்று அந்த ஊழியரைப் பாராட்டி வரும் நெட்டிசன்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் இத்தகைய அதிகாரப் போக்கைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இப்படி ஒரு கெத்து எனக்கும் வேண்டும்” என்று பல ஐடி ஊழியர்கள் இந்த போஸ்ட்டைத் தங்களது ஸ்டேட்டஸில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.