தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, நாளை மாவட்டச் செயலாளர்களுடன் அவர் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து விஜய் தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தலை எதிர்கொள்வதற்கான கள நிலவரங்களை நேரடியாக ஆய்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
