ஹரியானாவைச் சேர்ந்த 28 வயது விகாஸ், புனேயில் உள்ள ஒரு உலோக நிறுவனத்தில் ‘புரோகிூர்மென்ட் அனாலிஸ்ட்’ (Procurement Analyst) ஆகப் பணிபுரிந்து வருகிறார். இவரது திருமண வேட்டையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:
வீட்டில் அரேஞ்ச் மேரேஜ் செய்ய முடிவெடுத்து வரன்கள் பார்க்கத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் பெற்றோர் “யாரிடம் பேசினாய்? என்ன சொன்னார்கள்?” எனக் கேள்வி கேட்டு துளைத்தெடுத்ததால், விகாஸ் ஒரு யோசனை செய்தார்.
தனக்கு வரும் வரன்களின் பெயர், போன் அழைப்பு விவரங்கள் மற்றும் அவர்களின் பதில்கள் (Feedback) ஆகியவற்றை மிகத் துல்லியமாக ஒரு எக்செல் ஷீட்டில் ஆவணப்படுத்தினார்.
View this post on Instagram
இந்த எக்செல் ஷீட்டை அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர, அது 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது.
வீடியோ வைரலான பிறகு, இப்போது விகாஸின் இன்ஸ்டாகிராம் ‘டிஎம்’ (DM) பெட்டியில் பெண்களே நேரடியாகத் திருமண வரன்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்த அவரது நண்பர்களும், பெற்றோரும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனராம்.
இந்த நூதன முயற்சிக்கு இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் சமமாகப் பாய்கின்றன. சிலர் இது ஒரு ‘ஸ்மார்ட்’ வேலை என்று பாராட்டினாலும், இன்னும் சிலர் “திருமணம் என்பது உணர்வுப்பூர்வமானது, அதை இப்படி டேட்டா போலப் பார்ப்பது டேட்டிங் கலாச்சாரம் போன்றது” என விமர்சித்து வருகின்றனர்.
