அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக வெற்றி கழகத்தை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, விஜயை செங்கோட்டையன் எந்த நாட்டுக்கு முதலமைச்சராக போகிறார். ஒரு கல்லூரிக்கு வேண்டுமானால் அவரை முதல்வராக்கலாம்.
அதிமுகவில் இருந்து விலகி சென்ற செங்கோட்டையனை யாருமே இங்கு இருப்பவர்கள் மதிப்பது கிடையாது. வயதானவர் எனக் கூறி செங்கோட்டையனை தமிழக வெற்றி கழகத்தினர் தள்ளிவிட்டு செல்கிறார்கள். செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு. அவரை தமிழக வெற்றி கழகத்தில் இருப்பவர்கள் கூட ஏற்கவில்லை.
ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தெரியும். அதிமுகவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. ஏழைகளின் ரத்தத்தை லாட்டரி சீட்டு மூலமாக உறிஞ்சிய ஆதவ் அர்ஜுனா எங்களை பற்றி பேசக்கூடாது. உதயநிதி எங்களை திட்டட்டும். அவர் திட்டிக்கொண்டே இருந்தால்தான் எங்களுக்கு வளர்ச்சி. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போல ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே தான் போட்டி. மேலும் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே தான் வருகிற தேர்தலில் நேரடி போட்டி என்றார்.
