தூத்துக்குடி: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களைக் குறிவைத்து தீவிர களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த தேர்தல்களில் சரிவைச் சந்தித்த தொகுதிகளை மீட்டெடுத்து, தென் மண்டலத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக மாற்ற அவர் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி ‘தமிழக வெற்றிக் கழக’ பொறுப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் அக்கட்சியின் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற இலக்கு வைத்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு’, முக்கிய நிர்வாகிகளின் இந்த திடீர் இடமாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.