அமெரிக்காவைச் சேர்ந்த கெமி (Kemi) என்ற இன்ஸ்டாகிராம் பயனர், துப்பட்டா மீதான தனது காதலை ஒரு வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்:
“இந்திய மக்களே உங்களுக்கு ரொம்ப நன்றி. நீங்கள் கண்டுபிடித்த இந்த துப்பட்டா எனது ஆடைகளை 10 மடங்கு அழகாக்குகிறது” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
தோளில் அல்லது மார்பு பகுதியில் துப்பட்டாவை போர்த்திக் கொள்வது மிகச்சிறந்த ஸ்டைல் என்று பாராட்டிய அவர், இது இந்தியர்களின் கண்டுபிடிப்பு தானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே ஒரு டிக்-டாக் பயனர் துப்பட்டாவை ‘ஐரோப்பிய பாணி ஸ்கார்ஃப்’ என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், கெமி அதை இந்தியர்களின் படைப்பு எனத் தெளிவுபடுத்தியது இந்திய நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
