சமூக வலைதளங்களில் அவ்வப்போது விசித்திரமான பல ட்ரெண்டுகள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது பரவி வரும் ‘லாயல்டி டெஸ்ட்’ எனும் ஆபத்தான ட்ரெண்ட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் காதலர்கள் தங்கள் அன்பையும் உண்மையையும் நிரூபிப்பதற்காக, ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, கொதிக்கும் சூடான தேநீரைத் தங்கள் கைகளின் மேல் ஊற்றிக் கொள்கின்றனர். யார் அதிக வலியைத் தாங்கிக் கொண்டு கையை எடுக்காமல் இருக்கிறார்களோ, அவர்களே உண்மையான காதலர்கள் என்று இந்த ட்ரெண்ட் கூறுகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இந்த முட்டாள்தனமான செயலுக்கு சமூக ஆர்வலர்களும் மருத்துவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கொதிக்கும் நீரை உடலில் ஊற்றிக் கொள்வதால் தோல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மறையாத வடுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
View this post on Instagram
“>
“அன்பு என்பது நம்பிக்கையில் இருக்க வேண்டுமே தவிர, இப்படி உடலை வருத்திக் கொள்வதில் இல்லை” என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான காதல் அல்ல என்றும், இது போன்ற ஆபத்தான சவால்களை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
