10-ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பையில் இன்று (பிப். 07) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அமெரிக்கப் பந்துவீச்சை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. கடினமான ஆடுகளத்தில் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அமெரிக்க அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, உலகக் கோப்பை புள்ளிப் பட்டியலில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டியுள்ளது.
