வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் எனத் தெரிவித்து, கொங்குநாடு முன்னேற்ற கழகம் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறி அதற்கான ஆதரவு கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
கடந்த சில நாட்களாகப் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் அதிமுகவுடன் கைகோர்த்து வரும் நிலையில், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க இந்த அமைப்பின் ஆதரவு அதிமுகவிற்கு மேலும் பலம் சேர்க்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
