மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், ஒரு தொழிலதிபர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, அவர் பால்கனியில் நின்றபடி கடவுளை நோக்கிக் கைகூப்பித் தீவிரமாகப் பிரார்த்தனை செய்யும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் நீண்ட நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்த அவர், பின்னர் எவ்வித தயக்கமுமின்றி கீழே குதித்ததாகத் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. பொருளாதார நெருக்கடி அல்லது தனிப்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
The tragic death of Solapur businessman Sunil Sadarangani after jumping from a high-rise has shocked the city. Police are probing the incident, examining CCTV footage, as questions remain over the stress that led to the fatal step.#Solapur #MultaniBakery #Suicide #ViralVideo pic.twitter.com/4p2KnE0Hlj
— Ashmita Chhabria (@ChhabriaAshmita) February 6, 2026
“>
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தொழிலதிபர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
