பெங்களூருவின் மாதவர சந்திப்பு (Madavara Junction) அருகே வெள்ளிக்கிழமை அன்று இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆதித்யா என்ற ஐடி ஊழியர் தனது காரில் நீலமங்களாவிலிருந்து மான்யதா டெக் பார்க் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் ஓட்டுநர் ஒருவர் திடீரென காரை வழிமறித்து நிறுத்தினார்.
View this post on Instagram
காரை நிறுத்தியதோடு நிறுத்தாமல், ஆதித்யாவை தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த நபர், ஆபாசமான செய்கைகளையும் செய்துள்ளார்.
ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த பைக் ஓட்டுநர், காரின் சைடு மிரரை (Side-view mirror) எட்டி உதைத்து உடைத்ததோடு, காரையும் பலமாகத் தாக்கியுள்ளார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் ஆதித்யா தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
