நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது கன்னி உரையை ஆற்றினார்.
அப்போது அவர், தமிழ் மொழி பிச்சை எடுக்கவோ அல்லது திருடவோ உதவாது என்றும், தமிழன் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டான் என்றும் மிக ஆவேசமாகப் பேசினார்.
தனது ஓட்டையும், நாட்டையும் ஒருபோதும் விற்க மாட்டேன் என அவர் அதிரடியாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த உரை குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சினேகன், நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் ஆற்றிய ஆளுமை மிக்க உரையைக் கேட்டு உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கமலின் ஆங்கில உரையைத் துல்லியமாக மொழிபெயர்க்க தொழில்நுட்பங்கள் தடுமாறுவதால், அவரே நேரடியாகத் தமிழகம் வந்து அந்த உரையைத் தமிழில் விளக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் சினேகன் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
