மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடர்ந்து, தற்போது கொங்குநாடு முன்னேற்ற கழகமும் (கொமுக) அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் தங்கவேலு, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குத் தங்கள் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக ஆதரவுக் கடிதத்தை வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கொமுக நிர்வாகிகள் உடனிருந்தனர், மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
