மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்க முயலும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அன்று காலை 10 மணியளவில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் இந்தத் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ள அவர், புதிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு எதிராகத் திமுக அரசு செயல்பட்டு வருவதாகத் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
