சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றில், ஒரு ஏழைத் தந்தையின் கடின உழைப்பிற்கும் மகனின் விடாமுயற்சிக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி பலரது கண்களையும் கசியச் செய்துள்ளது.

 

தனது வாழ்நாள் முழுவதும் வறுமையுடன் போராடி, சைக்கிள் மெக்கானிக்காகப் பணிபுரிந்து மகனைப் படிக்க வைத்த ஒரு தந்தையிடம், அந்த மகன் தனது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பணி நியமன ஆணையைத் தரும் காட்சி இதயத்தைத் தொடுவதாக அமைந்துள்ளது.

துருப்பிடித்த சைக்கிள் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த அந்தத் தந்தை, மகனின் கையில் இருந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தபோது, அது அரசு வேலைக்கான ஆணை என்பதை உணர்ந்து ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார்.

மகனின் இந்தச் சாதனையை ஏற்றுத் தந்தை கட்டியணைத்த அந்த 51 விநாடிக் காட்சி, உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துவதுடன், ஒரு தந்தைக்கு இதைவிடப் பெரிய மகிழ்ச்சி எதுவுமில்லை என்பதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.