நிமிடம் கணக்கில் கழிப்பறையில் அமர்ந்து செல்போன் பார்ப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதற்கு உதாரணமாக, 50 வயது நபர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்து நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்திருந்த அந்த நபர், திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் நாம் கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, கால்களில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அழுத்தப்பட்டு, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக ரத்த அழுத்தம் திடீரென சரிந்து, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் மயக்கம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
View this post on Instagram
“>
இந்நிலையில் இன்றைய டிஜிட்டல் உலகில் கழிப்பறைக்கு செல்போன் கொண்டு செல்வது பலருக்கும் பழக்கமாகிவிட்டது. ஆனால், இது போன்ற பழக்கம் மயக்கம் மட்டுமின்றி, மூல நோய் மற்றும் மலக்குடல் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனைதொடர்ந்து குனிந்த நிலையில் நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது கழுத்து மற்றும் முதுகுத் தண்டிலும் பாதிப்புகளை உண்டாக்குகிறது. எனவே, கழிப்பறையில் 10 நிமிடங்களுக்கு மேலாகச் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உடலின் இயற்கையான உபாதைகளைத் தீர்க்கும் இடமாக மட்டுமே அதை வைத்திருக்க வேண்டும் என்றும் நரம்பியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
