தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பும் சிறிய கட்சிகள் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகளின் ஆதரவைத் திரட்டுவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தச் சூழலில், மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ரமேஷ் தலைமையிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவுக் கடிதத்தை வழங்கினர்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சியில் மட்டுமே அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
