அசுர வேகத்தில் வந்த டிராக்டர் ஒன்றை வீட்டின் உள்ளே நிறுத்த முயன்ற நபரால் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பாரம் ஏற்றப்பட்ட அந்த டிராக்டரை அதன் ஓட்டுநர் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வீட்டின் வாயில் வழியாக உள்ளே நுழைக்க முயன்றார்.
पता नहीं लोग वाहन को किया समझे लेते है
सोचते हैं की हमे कयेगे उधर जायेगा पर ऐसा नहीं होताआप देखे सकते हैं की एक बड़ी घटना होने से बची है pic.twitter.com/fWMmwsiQr9
— MAYANK MEENA (@mayank_meenq) January 30, 2026
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் வீட்டின் நுழைவு வாயிலில் பலமாக மோதியதுடன், அங்கிருந்த படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீதும் மோதியது. இதில் நிலைதடுமாறிய அந்தப் பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
வாகனத்தின் முன்பகுதி வாயில் கதவில் மோதிய வேகத்தில் டிராக்டர் மீண்டும் பின்னோக்கிச் சென்று நின்றது. நூலிழையில் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்ட போதிலும், வாகனத்தை முறையாகக் கையாளத் தெரியாமல் விளையாட்டுப் பொருளாக நினைத்துச் செயல்பட்ட அந்த நபரின் அலட்சியத்தைக் கண்டித்து இணையவாசிகள் பலரும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
