காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ருபாயா பகுதியில் அமைந்திருக்கும் கோல்டன் (Coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உலக அளவில் மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் கேமராக்கள் தயாரிக்கத் தேவைப்படும் கோல்டன் தாதுவில் 15% இங்கிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது. சுரங்கத் துறையில் இதுவரை நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அந்த நாடே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.