அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பற்றி அதிரவைக்கும் தகவல்களைப் பகிர்ந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சலில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் பழகியதால் அவருக்குப் பாலியல் ரீதியான நோய் (STD) ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயம் தனது மனைவி மெலிண்டாவிற்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அவருக்குத் தெரியாமலேயே கொடுப்பதற்குத் தேவையான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தன்னிடம் பில் கேட்ஸ் கேட்டதாகவும், இது தொடர்பான மின்னஞ்சல்களை உடனடியாக அழித்துவிடுமாறு அவர் கெஞ்சியதாகவும் அந்த ஆவணங்களில் எப்ஸ்டீன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பில் கேட்ஸின் ஆலோசகர் போரிஸ் நிகோலிக் எழுதியதாகக் கூறப்படும் சில குறிப்புகளும் சிக்கியுள்ளன. அதில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு மற்றும் இதுபோன்ற ரகசிய விவகாரங்களை மறைக்க உதவியது போன்ற காரணங்களால் தான் வேலையை விட்டு விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bill Gates should be canceled now that this email from Jeffrey Epstein has become public. pic.twitter.com/opD96XQp6b
— Quadcarl (@Quadcarl) January 30, 2026
இருப்பினும், இந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், பில் கேட்ஸைப் பழிவாங்க எப்ஸ்டீன் இது போன்ற பொய்களைப் பரப்பியிருக்கலாம் என்றும் அவரது தரப்பு விளக்கமளித்துள்ளது. உலகமே போற்றும் ஒரு தொழிலதிபர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது டெக் உலகையே ஆடிப்போகச் செய்துள்ளது.
