கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 36 வயதான வைஷாகன் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் 26 வயது இளம்பெண் ஒருவரிடம் தனது திருமணத்தை மறைத்துக் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வைஷாகனுக்குத் திருமணமான விஷயம் தெரியவரவே, அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வைஷாகன், அந்தப் பெண்ணைத் தனது இரும்புப் பட்டறைக்கு வரவழைத்து, தற்கொலை செய்துகொள்ளப் போவது போல நாடகமாடி, அவரைத் தடுக்க வந்த பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
பெண் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு, அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டு தனது இச்சையைத் தீர்த்துக்கொண்டுள்ளார். பின்னர் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டது போலக் காட்டிவிட்டு, தனது மனைவிக்கே போன் செய்து போலீசுக்குத் தகவல் சொல்லுமாறு கூறியுள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வைஷாகன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். தீவிர விசாரணையில், அவர் பெண்ணைக் கொன்றுவிட்டு சடலத்துடன் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
