​கோழிக்கோடு: இந்திய தடகள ஜாம்பவானும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி.டி. உஷாவின் கணவர் வி. சீனிவாசன் (64), கேரள மாநிலம் திக்கோடியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

முன்னாள் தேசிய கபடி வீரரான இவர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்த அவரை, உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

டெல்லியில் இருந்த பி.டி. உஷா, கணவரின் மறைவுச் செய்தி கேட்டு உடனடியாகக் கேரளா விரைந்தார். அன்னாரின் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.