ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோலராபூலியா கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் சிங் (35). இவர் தனது தாய் ராய்மணி சிங் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
தபன் சிங் தனது மனைவி மீது அதீத பாசம் வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது மனைவி கடுமையான நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார்.
பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் மனைவியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த தபன் சிங், தனது மனைவியின் உடல்நலக்குறைவிற்கு தனது தாய் தான் காரணம் என்று தவறாக எண்ணத் தொடங்கினார்.
தாயின் மீது ஏற்பட்ட இந்த வீண் சந்தேகத்தால் அந்த குடும்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.
