தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்துப் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சினிமா புகழுக்கும் அரசியலுக்கும் உள்ள வித்தியாசத்தை மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார். “விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு நடிகர் என்றால் அவரைக் காண மக்கள் கூட்டம் வரத்தான் செய்யும்; ஆனால் சிறந்த அரசியல்வாதியாக நாங்கள்தான் செயல்படுகிறோம்” என்று அவர் தனது அரசியல் அனுபவத்தை முன்வைத்து நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளார்.
மேலும், விஜய்யைப் பார்க்க வந்த கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் பொறுப்புணர்வை கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். “உங்களைப் பார்க்க வந்ததால்தான் அந்த 41 உயிர்கள் பறிபோயிருக்கின்றன. அவர்களுக்கு ஒரு ஆறுதல் கூட தெரிவிக்க முடியவில்லை என்றால் எதற்காகக் கட்சி நடத்துகிறீர்கள்?” என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார். ஒரு தலைவராக மக்களின் துயரத்தில் பங்கெடுக்கத் தவறியதைக் குறிப்பிட்டு, விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை இபிஎஸ் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
