நீர்யானைகள் நிறைந்த குளத்தில் யானை ஒன்று மிகவும் துணிச்சலாகவும் நிதானமாகவும் நிற்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நீர்யானைகள் ஆக்ரோஷமான குணம் கொண்டவை என்பதால் அவற்றின் அருகே செல்ல மற்ற விலங்குகள் அஞ்சும் நிலையில், இந்த யானை எவ்வித பயமும் இன்றி நீர்யானைகளுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தது.
That elephant didn’t even bother turning around to deal with the hippo that was biting its butt. It just gave a slow backward kick, and the hippo ran off in panic 🐘😂 pic.twitter.com/4Tty4AUTKz
— Beauty of music and nature 🌺🌺 (@Axaxia88) January 28, 2026
ஒரு கட்டத்தில் நீர்யானை ஒன்று யானையை அதன் பின்னால் கடிக்க முயன்ற போதும், யானை அதனைப் பொருட்படுத்தாமல் தனது காலால் லேசாக எட்டி உதைத்து விரட்டியதுடன், தாகம் தணிந்த பிறகு மெதுவாக அங்கிருந்து வெளியேறியது. சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த வனவிலங்கு காணொளியை இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
விலங்குகளுக்கிடையேயான இந்த வியக்கத்தக்க புரிதல் மற்றும் யானையின் அசாத்திய துணிச்சலை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
