சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது. ஒரு நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கருப்பு நிற தார் காரும், தவறான திசையில் வந்த பல்சர் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதே இந்த விபத்துக்குக் காரணம்.
சாலையில் அமைதியான சூழல் நிலவிய நிலையில், திடீரென மின்னல் வேகத்தில் வந்த பைக் காரின் மீது மோதியதும், பைக் ஓட்டிய நபர் தூக்கி வீசப்பட்ட காட்சி பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்கிறது.
இந்தக் கோர விபத்தின் வேகத்தில் நிலைதடுமாறிய தார் கார், சாலையோரம் இருந்த புதர்களுக்குள் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்தது. பைக்கில் வந்தவர் விதிமுறைகளை மீறி தவறான திசையில் வந்ததே இந்த விபத்து நிகழ முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
Leopard trail, Gurgaon HR: A Mahindra Thar collided with Pulsar NS400Z. pic.twitter.com/FVut72rzH0
— Deadly Kalesh (@Deadlykalesh) January 28, 2026
“>
‘Deadly Kalesh’ என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.
