உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகம் முன்பாகவே நடைபெற்ற ஒரு அதிரடிச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதி சாலையில், காய்கறி விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு இளம்பெண்ணிடம், அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், சற்றும் தயங்காமல் அங்கிருந்த தடி ஒன்றைக் கையில் எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்த இளைஞரை விரட்டி விரட்டித் தாக்கினார். அந்த இளைஞர் தப்பியோட முயன்றபோதும், அவரது சட்டையைப் பிடித்து இழுத்துத் தடியால் விளாசி அந்தப் பெண் ‘ஸ்பாட் ஜஸ்டிஸ்’ வழங்கினார்.
सरेराह लड़की को ये मनचला छेड़ रहा था, फिर लड़की ने डंडा उठाया और जमकर खातिरदारी की. यूपी के हमीरपुर की वीडियो है. pic.twitter.com/8DQmXZ8IJO
— Priya singh (@priyarajputlive) January 28, 2026
“>
காவல்துறையினரின் உயர் அதிகாரி அலுவலகம் முன்பே இந்தத் துணிகரமான தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் திகைப்பில் உறைந்தனர். பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசப்படும் நிலையில், அத்துமீறுபவர்களுக்குப் பாடம் கற்பித்த இந்த ஹமீர்பூர் பெண்ணின் துணிச்சலை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
