இந்தியாவின் முதல் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் சமீபத்தில் மேற்கு வங்கத்தின் ஹவுராவிலிருந்து அசாமின் காமக்யா வரை இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ஆரம்பத்தில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டதால், பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் உருவானது. நீண்ட தூரப் பயணம் என்பதால் அசைவ உணவுகளும் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கிழக்கு ரயில்வே நிர்வாகம், தற்போது பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் உணவுப் பட்டியலில் அசைவ உணவுகளும் சேர்க்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த வாரத்திலிருந்து பயணிகள் தங்களுக்கு விருப்பமான இறைச்சி உணவுகளையும் ரயிலிலேயே வாங்கி உண்ண முடியும்.
