கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று வெறிநாய் ஒன்று பயங்கர அட்டகாசம் செய்தது. அந்தத் தெரு வழியாக நடந்து சென்ற சவுராபானு என்ற மூதாட்டியை எதிர்பாராத விதமாகத் தாக்கிய அந்த நாய், அவரது கை விரலை கடித்தது.

இதில் மூதாட்டியின் விரல் துண்டானது. வலியால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூதாட்டியைத் தொடர்ந்து, அதே பகுதியில் சுற்றித் திரிந்த அந்த வெறிநாய் மற்றவர்களையும் விரட்டிச் சென்று கடித்தது. இதில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 6 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.