வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், தனது மனைவியைக் கள்ளக்காதலனுடன் நேரில் கண்ட கணவன் அவரைப் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்காட்சியில் பணி நிமித்தமாகச் சென்றிருந்த கணவர், அங்கு தனது மனைவி மற்றொரு நபருடன் நெருக்கமாகச் சுற்றித் திரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆத்திரமடைந்த அவர் உடனடியாக மனைவியைக் கன்னத்தில் அறைந்ததோடு, அவருடன் இருந்த நபரையும் பிடிக்க முயன்றார்.

 

ஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், கணவன் தனது மனைவியைக் கண்காட்சித் திடலில் வைத்து ஆவேசமாகச் சத்தமிட்டு இழுத்துச் சென்றார். இந்த மோதலை அங்கிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வேடிக்கை பார்த்த நிலையில், இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாகியுள்ளது.