தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாமல்லபுரம் கூட்டத்தில் பேசும்போது, “தலைவர் விஜய் நினைத்தால் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்ல முடியும், ஆனால் சட்டப்படி அவர் 3 அல்லது 4 தொகுதிகளில் போட்டியிடுவார்” என்று ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும், அரசியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் குழப்பமடைந்துள்ளனர்.

ஏனென்றால், இந்திய தேர்தல் விதிகளின்படி (Representation of the People Act, 1951) ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். புஸ்ஸி ஆனந்த் ‘4 தொகுதிகள்’ என்று குறிப்பிட்டது ஒருவேளை உணர்ச்சிவசப்பட்ட பேச்சாக இருக்கலாம் அல்லது சட்ட விதிகள் குறித்த ஒரு சிறு தவறான புரிதலாக இருக்கலாம் எனப் பேசப்படுகிறது.

​எப்படியிருந்தாலும், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாரா? அல்லது மற்றுமொரு அதிரடி முடிவை எடுப்பாரா? என்பது இன்னும் சஸ்பென்ஸ் தான். 1996-க்கு முன்னாடி எத்தனை தொகுதிகள்ல வேணும்னாலும் நிக்கலாம்ங்கிற விதி இருந்தது, ஆனா இப்போ இருக்கிற சட்டப்படி 2 தான் டார்கெட்! ஆனந்த் அவர்களின் இந்த “4 தொகுதி” முழக்கம், தேர்தல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை உண்டாக்கியுள்ளது.