சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் மழலை மாறாத வீடியோ தற்போது இணையவாசிகளிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் மிகவும் அப்பாவித்தனமாக, “இறைவா, ஏதேனும் மந்திரம் செய்து என்னைக் காப்பாற்று” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டிருக்கிறான்.
இந்நிலையில் அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, சற்றும் எதிர்பாராத விதமாகப் பின்னாலிருந்து அவனுடைய அம்மாவின் கை பறந்து வந்து ஒரு பலமான தப்படால் அவன் கன்னத்தில் விழுகிறது. அந்தத் தணணிக்கை செய்யப்படாத “அம்மாவின் அன்பு” அந்தச் சிறுவனின் மந்திரக் கனவை நொடிப்பொழுதில் கலைத்துவிட்டது.
View this post on Instagram
“>
தற்போது சிறுவனின் அந்த அப்பாவியான முகபாவனையும், அதைத் தொடர்ந்து வந்த அம்மாவின் அதிரடியான அடியும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. “நிஜ வாழ்க்கை மந்திரங்களை விட அம்மாவின் அடிக்குத் தான் சக்தி அதிகம்” எனப் பலரும் இந்த வீடியோவிற்கு நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
