திருச்செங்கோட்டில் முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை, காவல்துறையினர் முன்னறிவிப்பு இன்றி அகற்றியதற்கு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த விதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியபோது காவல்துறையினரிடம் பதில் இல்லை என்றும், இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் சாடியுள்ளார்.
<a href=”http://
அதிகாரத் திமிரா? தோல்வி பயமா?
திருச்செங்கோட்டில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை (Banners), எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகார பலத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
தகவல் அறிந்து நேரில் சென்று தடுத்து நிறுத்தினேன்.… pic.twitter.com/QDhiJwTXLQ
— Arunraaj TVK (@arunraajkg) January 24, 2026
“>
ஆளுங்கட்சியின் அதிகாரத் திமிராலும் தோல்வி பயத்தாலும் இதுபோன்ற செயல்கள் செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எத்தனை தடைகள் வந்தாலும் மக்களின் ஆதரவோடு அவற்றை உடைத்தெறிவோம் என்று கூறியுள்ள அருண்ராஜ், “நாங்கள் விதை, எங்களைப் புதைக்க நினைத்தால் மீண்டும் முளைப்போம்” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
