முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி கொண்ட ரயிலில் பயணம் செய்த தீபக் வேதி என்ற பயண ஆர்வலர், ரயிலின் கதவு பாதுகாப்பு குறித்து எழுப்பியுள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ரயிலின் உட்புறக் கதவைத் திறந்தவுடன் அது நேரடியாக ரயிலுக்கு வெளியே செல்லும் திறந்தநிலை வாசலுடன் இணைந்திருப்பதைக் காட்டி, தவறுதலாக யாராவது தள்ளினால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

 

இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிலர் இது ரயிலின் இருபுறமும் கதவுகள் திறக்கும் சாதாரண நடைமுறைதான் என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து விளக்கம் கேட்டுள்ள ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட ரயிலின் எண் மற்றும் பயண விவரங்களைத் தங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.