தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் சரியாகச் செய்து வருவதாகக் குறிப்பிட்டதோடு, இது விஜய்யை மிரட்டும் முயற்சியாக நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, அதற்கான பதில் விஜய்யின் மனசாட்சிக்குத்தான் தெரியும் என்று மர்மமாகப் பதிலளித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்தும் அவர் விளக்கம் அளித்20-க்குப் பின் அதிரடி மாற்றம்தார். தேமுதிகவின் அரசியல் பயணத்தை ஒரு தாயாக தான் கவனித்து வருவதாகவும், உரிய நேரத்தில் கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான நல்ல முடிவை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போது எந்தவொரு கூட்டணியும் முழுமையான வடிவம் பெறவில்லை என்றும், பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகே தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் மூலம் தேமுதிக தனது கூட்டணி முடிவை விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.