ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜோமேட்டோவில் (Zomato) வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை டெலிவரி செய்ய வந்தவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கு வந்தவுடன், ஜோமேட்டோ நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளருக்கு ஒரு தானியங்கி அழைப்பு (Automated Call) வந்துள்ளது. அதில், “உங்களுக்கு உணவை வழங்க வந்துள்ள டெலிவரி பார்ட்னர் ஒரு மாற்றுத்திறனாளி. எனவே, தயவுசெய்து நீங்கள் கீழே வந்து உங்கள் உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்ற கனிவான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்தச் சிறப்பான அணுகுமுறையைக் கண்டு நெகிழ்ந்த அந்த வாடிக்கையாளர், இதனை ஒரு காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

​மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலை மற்றும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தகுந்த மரியாதை அளிக்கும் வகையில் ஜோமேட்டோ எடுத்துள்ள இந்த முயற்சிக்கு இணையதளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.