மக்கள் நம்பிச் சாப்பிடும் உணவகங்களில் இது போன்ற அநாகரீகமான செயல்கள் நடப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தில் உள்ள ‘சிக்கன் பாயிண்ட்’ (Chicken Point) என்ற உணவகத்தில் ஜாவேத் அன்சாரி என்ற ஊழியர் தந்துரி ரொட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் ஒவ்வொரு ரொட்டியையும் அடுப்பிற்குள் போடுவதற்கு முன்பு, அதில் எச்சில் துப்புவதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, பொதுமக்களின் கண்டனம் வலுத்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மதுபன் பாபுதாம் போலீசார், வீடியோவில் உள்ளது உண்மைதான் என்பதை உறுதி செய்த பின், குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் அன்சாரியை அதிரடியாகக் கைது செய்தனர்.

ஏற்கனவே இதே பகுதியில் பழச்சாற்றில் சிறுநீர் கலந்ததாகப் புகார் எழுந்து ஒரு ஜூஸ் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு உணவகத்தில் இதுபோன்ற அருவருப்பான சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.