பிலாஸ்பூரில் உள்ள ‘சிம்ஸ்’ (CIMS) அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் பெண் உதவியாளர் ஒருவர் செவிலியர் மற்றும் பாதுகாவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது உறவினரான கர்ப்பிணிப் பெண்ணை டிஸ்சார்ஜ் செய்யக் கோரி காலை முதலே மருத்துவப் பணியாளர்களுடன் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
<a href="http://
बिलासपुर। जिले के सबसे बड़े सरकारी अस्पताल सिम्स (SIMS) में उस वक्त अफरा-तफरी मच गई, जब डिस्चार्ज को लेकर एक महिला ने गायनिक वार्ड में जमकर हंगामा किया। बताया जा रहा है कि महिला जल्द डिस्चार्ज की मांग को लेकर डॉक्टर से बदतमीजी करने लगी. आरोप है कि विवाद बढ़ने पर उसने ड्यूटी पर… pic.twitter.com/oIv19En6JA
— Lallu Ram (@lalluram_news) January 21, 2026
“>
மதியம் 2 மணிக்கு மேல் ஆவணங்கள் தயாராகிவிடும் என்று செவிலியர்கள் கூறியும், அதை ஏற்காத அவர் ஆத்திரமடைந்து அங்கிருந்த பயிற்சி மருத்துவர் மற்றும் செவிலியரைத் தாக்கியுள்ளார்.
இந்த மோதலின் போது தடுக்க வந்த பாதுகாப்புப் பணியாளர்களிடமும் அந்தப் பெண் அநாகரீகமாக நடந்துகொண்டார்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகளை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
