சமீபகாலமாக ரீல்ஸ் மோகம் என்பது பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மாறிவருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், தற்போது ரயிலுக்குள் நடந்த ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ரயிலின் பொதுப் பெட்டி (General Coach) மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இடமே இல்லாத அந்தச் சூழலில், ஒரு இளம்பெண் திடீரென கேமராவை ஆன் செய்துவிட்டு, பயணிகள் நடந்து செல்லும் பாதையில் நின்றுகொண்டு நடனமாடத் தொடங்குகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Patna Memes (@patnamemes__)

இதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள், “என்ன நடக்கிறது?” என்று புரியாமல் இமைக்காமல் அவரையே வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றனர். ஆனால், அந்தப் பெண் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது ரீல்ஸ் எடுப்பதிலேயே மும்முரமாக இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “பயணிகளுக்கு டிக்கெட் காசு முழுவதுமாக வசூலாகிவிட்டது” என ஒரு பயனர் கிண்டலாகக் கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொருவரோ, “பொதுப் பெட்டி டிக்கெட் எடுத்துவிட்டு முதல் வகுப்பு (First Class) பொழுதுபோக்கை அனுபவிக்கிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதே சமயம், இது போன்ற செயல்கள் சக பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.