பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. ரயிலில் தனியாகப் பயணம் செய்த 18 வயது மாணவி ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இப்போது இணையவாசிகளைப் கொதித்தெழச் செய்துள்ளது.

டெல்லியில் இருந்து புனே நோக்கி 32 மணிநேரப் பயணமாக ரயிலில் தனியாகச் சென்றுள்ளார் அந்த மாணவி. அப்போது, அதே பெட்டியில் பயணம் செய்த ஒரு நபர், மாணவி அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும், ஏன் தூங்கும் போது கூட இமைக்காமல் அவரையே வெறித்துப் பார்த்துள்ளார்.

Had a creep encounter
byu/Technical-Rent-5999 inindianrailways

வெறும் பார்வையுடன் நிற்காமல், கண்ணாலேயே சைகை செய்வது, போன் செய்வது போல ஜாடை காட்டுவது என அந்த மாணவியை ஒருவித அச்சத்திலேயே வைத்துள்ளார்.

பயந்து போன மாணவி, ஆதாரத்திற்காக அந்த நபரை வீடியோ எடுத்துத் தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார். “எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக வந்துவிடு” என அவரது தாயார் சொன்னாலும், அந்தப் பயங்கரப் பார்வையால் நிலைகுலைந்த மாணவி தனது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் கொட்டியுள்ளார்.