தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதத்தின்போது, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அவர்கள் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகமே வியக்கும் வகையில் தமிழின் பெருமையையும், அதன் பழமையையும் போற்றி வருகிறார். தமிழ் கலாச்சாரத்திற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் அளப்பரியது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வானதி சீனிவாசனின் இந்தப் பேச்சை இடைமறித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள், ஒரு காரசாரமான உண்மையை முன்வைத்தார். “பிரதமர் தமிழின் பெருமையைப் பேசுகிறார் என்று நீங்கள் இங்கே சொல்கிறீர்கள். ஆனால், அதே பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒடிசா மாநிலத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ‘தமிழர்கள் திருடர்கள்’ என்ற தொனியில் பேசினார்களே, அது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவி விவகாரத்தை வைத்து ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதைச் சுட்டிக்காட்டி அவர் கொடுத்த இந்த பதிலடி அவையையே அதிர வைத்தது
