தமிழகத்தில் வரும் தேர்தலை முன்னிட்டு டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளது. தமிழக மக்களின் நலனுக்காகவும், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
இவரை வரவேற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள், இந்த இணைப்பால் கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வளமான தமிழகம் – வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி” என டி.டி.வி. தினகரனை மனதார வரவேற்றுள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் ஆட்சியால் மக்கள் சோர்வடைந்துள்ளதாகவும், மோடியின் தலைமையிலான வளர்ச்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள தினகரன், திமுகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம் என உறுதி அளித்துள்ளார்.
