உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் கார்முக்தேஸ்வர் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், முதியவர் ஒருவர் அங்கிருந்த சிலையில் போர்த்தப்பட்டிருந்த போர்வையை ரகசியமாக எடுத்துச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
அந்த முதியவர் முதலில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு எவரும் கவனிக்காத வேளையில் சீதா தேவியின் சிலையில் இருந்த போர்வையை எடுத்துத் தனது ஆடைக்குள் மறைத்துச் செல்வதை அந்த வீடியோவில் காண முடிகிறது. இந்தக் காட்சி இணையத்தில் பரவியதை அடுத்து, இது ஒரு குற்றம் எனச் சிலர் விமர்சித்தாலும், அந்த முதியவரின் வயது மற்றும் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு அவரது செயலை ஒரு சமூக அவலத்தின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கோயில் நிர்வாகம் அல்லது காவல்துறை தரப்பில் இது குறித்து இதுவரை எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்றாலும், வறுமையின் காரணமாகவே அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என இணையவாசிகள் சமூக அக்கறையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
