தெலங்கானா மாநிலம் திருமலகிரி பகுதியில் புதன்கிழமை காலை தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுவன் ராணுவ வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ பொதுப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் சரிந்ததில், பின்னால் வந்த ராணுவ வாகனத்தின் முன் சக்கரம் அவர்கள் மீது ஏறியது.
#Hyderabad | A tragic road accident claimed the life of a 6-year-old Class 1 student of an Army school after a two-wheeler skidded and came under an Army vehicle near the RK Puram flyover in Secunderabad, under Neredmet police station limits.
The child died on the spot, while… pic.twitter.com/nzYNsAyJsI
— Deccan Daily (@DailyDeccan) January 21, 2026
இதில் முதலாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த அவது தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சைதாபாத் பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்த சுனில் குமார் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மற்றொரு விபத்தும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
